வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (06:50 IST)

அண்ணா பல்கலையின் பருவத்தேர்வு கட்டணம் 50% உயர்வு: அமைச்சர் பொன்முடியின் முக்கிய அறிவிப்பு..!

Ponmudi
அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வு  கட்டணம் 50% உயர்த்தப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பருவத்தேர்வு கட்டணத்தை உயர்த்த கூடாது என மாணவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சிண்டிகேட் கூடி முடிவெடுக்கும் வரை கட்டணம் உயர்த்தப்படாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது>

பொறியியல் படிப்புகளுக்கான பருவத்தேர்வு கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியானது. இந்த முடிவு கடந்த ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அப்போதே தேர்வு கட்டண உயர்வை நான் நிறுத்தி வைத்தேன். இந்த ஆண்டு மீண்டும் பருவத்தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பு வெளியானதில்  கிராமப்புற மாணவர்கள் பலரும் கவலை அடைந்த நிலையில், கட்டண உயர்வை நிறுத்தக்கோரி கோரி மாணவர்கள் சார்பில்  கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கோரிக்கைகளை ஏற்று தமிழக முதல்வரின் அறிவுரையின்படி  அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் இணைந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Edited by Siva