வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 22 அக்டோபர் 2018 (20:36 IST)

மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். 
 
அப்போது செய்தியாளர்களிடம் ரஜினி பேசுகையில் கட்சிப்பணிகள் 90 சதவிகிதம் முடிந்து உள்ளதாகவும், நல்ல நேரம் காலம் பார்த்து கட்சி துவங்கும் அறிவிப்பு வெளியிடுவேன் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.  
 
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திங்கள் கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
சுமார் 2 அரை மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்ட ரஜினி, கட்சி தொடங்குவதற்கான பணிகளை விரைவாக செய்ய வேண்டியது குறித்து மன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.