’’ரஜினி கட்சி தொடங்காததால் கேலி பேசுவார்கள்..’’வீட்டு முன் காத்திருக்கும் ரசிகர்கள் !!
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து சென்னை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே அவர் தான் அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவரது இந்த மனமாற்றத்திற்கு உடல்நிலை காரணமாக இருந்தாலும், அவரது நெருங்கிய நண்பர்களான தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன்பாபு மற்றும் சிரஞ்சீவி இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதால் தங்கள் வீட்டார் கேலி செய்வார்கள் என்பதால் கடந்த மூன்று நாட்களாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் முன் காத்திருப்பதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.