'தர்பார்' ரிலீஸ் எப்போது? அனிருத் தகவல்

Last Modified திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (07:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புல் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சியை படமாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஜெய்ப்பூர் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பும் அதனையடுத்து வெளிநாட்டு பாடல் காட்சியின் படப்பிடிப்பும் நடைபெறும் என படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது.


இந்த நிலையில் 'தர்பார்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நேற்று சென்னை பாண்டிபஜாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, 'தர்பார்' படத்தின் பாடல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வரும் நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் கோடிக்கணக்கான ரஜினிகாந்த் ரசிகர்களை போல் தானும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் இந்த படம் வளர்ந்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :