வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By

வெரிகோஸ் வெயின் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...?

வெரிகோஸ் வெயின். கால் ரத்தக் குழாய்கள் (சிலர் நரம்புகள் என்று தவறாகச் சொல்வார்கள்) சுருண்டு, வீக்கம் அடைந்து, புடைத்து வெளியே தெரியும். தாள முடியாத வலி இருக்கும். கால்கள் வீங்கிக்கொள்ளும். ரத்த நாளங்கள் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படும்.  
அறிகுறிகள்: தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம்  காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல். பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். கணுக்காலிலும்,  பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள்  தவறாககருதிவிடுவது உண்டு). வெரிகோஸ் வெயின் (Varicose vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.
 
வரும்முன் தடுக்க என்ன செய்யவேண்டும்?
 
இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக  இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.
 
தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.