ரஜினி, கமல் இதுக்காக நிச்சயம் சேரணும்: விஷால்

Last Modified புதன், 27 பிப்ரவரி 2019 (07:48 IST)
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து ஒருவருடம் முடிந்துவிட்ட நிலையில் ஆரம்பத்தை விட தற்போது அதிக உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார். ஓட்டு கணக்கு, ஓட்டு சதவீத கணக்கு என்பதையெல்லாம் பார்க்காமல், ஒரு தொகுதி, இரண்டு தொகுதிக்காக கழகங்களிடம் கையேந்தாமல் தனித்து போட்டி என்ற தைரியமான முடிவை எடுத்துள்ளார்.

கமலின் இந்த முயற்சி இந்த முறை வெற்றி பெறுகிறதோ இல்லையோ, நிச்சயம் மக்கள் மத்தியில் பேசப்படும். அது அடுத்த தேர்தலுக்கு பயன்படும். இந்த நிலையில் கமலுக்கு ரஜினிகாந்த் கைகொடுத்தால் இந்த தேர்தலியேயே மாற்றம் ஏற்படும் என நடிகரும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது; ரஜினி மற்றும் கமல் இணைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நடிகர் சங்கத்திற்காக அல்ல, ஒரு ரிசப்ஷன் நிகழ்ச்சிக்காக அல்ல, ஒரு மல்டி ஸ்டார் திரைப்படத்திற்காக அல்ல, எதற்காகவும் அல்ல, அது 2019 லோக்சபா தேர்தலுக்காக. இருவரும் இணைந்தால் இந்த தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்' என்று கூறியுள்ளார்.

விஷாலின் கோரிக்கையை ஏற்று 40 தொகுதிகளுக்கும் கமல் கட்சிக்கு ரஜினி ஆதரவு அளிப்பாரா? தமிழகத்தில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :