டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல்: நடிகர் ராதாரவி மீண்டும் வெற்றி..!
தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் நடிகர் ராதாரவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்ட நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது
இந்த நிலையில் நேற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டது என்பதும் மொத்தம் பதிவான 1021 வாக்குகளில் ராதாரவி 662 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு 349 வாக்குகளும் சற்குணராஜ் என்பவருக்கு 36 வாக்குகளும் கிடைத்தது
இதனை அடுத்து ராதாரவி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டப்பிங் யூனியனில் 23 நிர்வாகிகளும் இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் ராதாரவி மீது டப்பிங் யூனியனில் உள்ள ஒரு சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவர் அபார வெற்றி பெற்றுள்ளார் என்பதும் மீண்டும் கலைஞர்கள் யூனியனின் தலைவராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva