திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:08 IST)

நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல்

நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் நடிவேல் என்றழைக்கப்படும் எம்.ஆர்.ராதாவின் மகனும் மூத்த நடிகருமான ராதாரவி, சினிமாவில் நடிப்பதுடன், சின்னத்திரை, மற்றும் டப்பிங் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்,

இந்த நிலையில், சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இயங்கி வரும் ராதாரவியின் டப்பிங் யூனியன் சங்கக் கட்டடம் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகப்  புகார் எழுந்தது.

இதுகுறித்து, சென்னை உயர்  நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பல கட்ட விசாரணைக்குப் பின் ராதாரவி தரப்பில்  தகுந்த ஆதாரங்கள்

இந்த நிலையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி சாலிகிராமத்தில் உள்ள டப்பிங் சென்னை மா நகராட்சி அதிகாரிகள்  நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பொருட்களை எடுக்க, கட்டிடத்தை இடித்துக் கட்ட விண்ணப்பிக்க சீலை அகற்றி 17 ஆம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தனர்.

 நேற்றுடன் இதற்கான அவகாசம் முடிந்த நிலையில்,  டப்பிங் யூனியனுக்கு சீல் டத்தோ ராதாரவி வளாகம் என்ற பெயர் பலகையை அகற்றி, ராதாரவியின் டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டு சீல் வைத்துள்ளனர்.

இது சினிமா வட்டாரத்தில் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.