செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 ஜனவரி 2018 (14:00 IST)

ஜூலியை நடிக்க வைத்து அசிங்கப்படுத்திய இயக்குநர்; கலாய்க்கும் நெட்டிசன்கள்

விமல் தயாரித்து, நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. நேற்று இப்படம் வெளியாகியுள்ளது. ‘கயல்’ ஆனந்தி  ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி  கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
 
பிக்பாஸ் ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள  மன்னர் வகையறா படம் நேற்று ரிலீசானது. இதில் ஜூலி நடித்துள்ளார் என்றதும் ரசிகர்கள் ஆவலுடன் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்போது ஜூலி வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் இயக்குநர் ஏமாற்றாமல் இறுதி காட்சியில் ஜூலியை நடிக்க வைத்திருக்கிறார். இதனை சிலர் நடிக்க வைக்கவில்லை,  ஜூலியை வைத்து கலாய்த்துள்ளார் என்று கூறிகின்றனர்.
 
இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்த அவமானம் உனக்கு தேவையா? என ஜூலியை மீண்டும் கழுவி ஊற்ற தொடங்கி உள்ளனர்.