திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (22:14 IST)

அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா?; கேள்வி கேட்கும் ஜூலி

ஜல்லிக்கட்டுப் பெண்ணாக நமக்குத் தெரிந்த ஜூலி, பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நுழைந்து பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ்  ஜூலியாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளது. இதனால் தினமும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
 
மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசுதான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து  விலகுவார்களா? என்று ஜூலி கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.
ஜூலியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரின் துணிச்சலை பாராட்டியும், சிலர் அவரை வழக்கம் போன்று கலாய்த்தும் ட்வீட் செய்துள்ளனர்.