ரோல்மாடல் பிரியங்கா சோப்ரா! ஹாலிவுட்டுக்குச் செல்லும் தமிழ் நடிகை

VM| Last Modified வியாழன், 4 ஏப்ரல் 2019 (09:52 IST)
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிவேதா பெத்துராஜ், படித்தது வளர்ந்தது எல்லாமே வெளிநாடுகளில்.


தமிழில். ஒரு நாள் கூத்து, பொதுவாக என மனசு தங்கம், திமிருபிடிச்சவன், டிக் டிக் டிக். தற்போது நிவேதா பெத்துராஜ் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், பிரபு தேவாவுடன் பொன்மாணிக்கவேலு படத்திலும் நடித்து வருகிறார். விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். 
 
இந்தநிலையில் பிரியங்கா சோப்ராவைப் போல் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாக நிவேதா கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், `எனக்கு தமிழ் படங்களில் நடித்ததில் மகிழ்ச்சி. அமெரிக்கா சென்று ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். வருகிற ஜூன் மாதம் அமெரிக்கா போய் விடுவேன். இந்த விஷயத்தில், எனக்கு வழிகாட்டியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. நடிப்பில் நிறைய சாதிக்க வேண்டும். அதற்காகவே ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறேன்’ என்று மனம் திறந்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :