ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (15:46 IST)

கமல் சார் பாடுவதை சினிமாக்காரர்கள் எல்லோரையும் பார்க்க வைக்கவேண்டும்… இயக்குனர் பிரேம்குமார் ஆசை!

கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக உருவாகியிருந்த மெய்யழகன் திரைப்படம் பெருவாரியான ரசிகர்களைக் கவர்ந்தது.

ஆனால் படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களும் வராமல் இல்லை.  படம் ஆமை வேகத்தில் நகர்வதாகவும், படம் முழுவதும் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக் கொண்டே இருப்பது ஒரு மெகா சீரியல் உணர்வை ஏற்படுத்துவதாகவும் சில எதிரமறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் கதாபாத்திரம் போன்ற ஒருவர் நிஜ வாழ்க்கையில் இருக்க முடியாது. அது ஒரு உடோபியன் கதாபாத்திரம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் “போறேன் நான் போறேன்” என்ற பாடலை பாடியிருந்தார். படத்தில் உணர்ச்சிப்பூர்வமான இடத்தில் அந்த பாடல் இடம்பெற்றதால் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை நெக்குருக வைத்தது. அந்த பாடல் பதிவு சம்பவம் பற்றி பேசியுள்ள இயக்குனர் பிரேம்குமார் “மெய்யழகன் படத்தில் கமல் சார் பாடிய பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்ட போது ஒரு சிங்கம் மாதிரி இருந்தார்.  அவரது தாடி மீசை எல்லாம் பிடரி மாதிரியே இருந்தது. தமிழ் சினிமாக் காரர்களை எல்லாம் அந்த ரெக்கார்டிங் ரூமுக்கு அழைத்துச் சென்று அவர் பாடுவதைப் பார்க்க சொல்லவேண்டும் என எனக்கு ஆசையாக இருந்தது. அது லட்சம் பேராக இருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் ஒரு 20 பேருக்குதான் அந்த ப்ராப்தம் அமைந்தது.”எனக் கூறியுள்ளார்.