1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (08:24 IST)

விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்ட்டின் மனநிலை மாறியுள்ளது… ஷிகார் தவான் பாராட்டு!

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவருக்கு தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள மீண்டும் சர்வதெசக் கிரிக்கெட்டுக்கு திரும்பி முன்பை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஐபிஎல், டி 20 உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர்கள் என அனைத்திலும் அவர் பங்களிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. இந்நிலையில் பண்ட் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஷிகார் தவான் “நான் பண்ட்டை அவரது விபத்துக்குப் பிறகு சந்தித்தேன். அப்போது அவர் தலையில் கட்டோடு பெரிய சிரிப்போடு என்னைப் பார்த்தார். அதுதான் ரிஷப் பண்ட். அவரிடம் இருந்த தன்னம்பிக்கைதான் அவரை மீண்டும் கிரிக்கெட் களத்துக்குள் கொண்டு வந்துள்ளது.

அவர் இப்போது மனதளவில் மிகவும் பலமாக இருக்கிறார். விபத்துக்குப் பின் அவர் வாழ்க்கையைப் பார்க்கும் விதமே மாறியுள்ளது. அவர் எப்போதுமே ஒரு கவலையில்லாத மனிதனாகவே இருப்பார்.” எனக் கூறியுள்ளார்.