வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (12:45 IST)

’திரௌபதி’ படத்திற்கு தடை கேட்கும் பெரியார் திராவிட இயக்கம்: நெட்டிசன்கள் பதிலடி

கடந்த 3ஆம் தேதி ’திரௌபதி’ என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோகன் என்பவர் இயக்கிய இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட்ஸ், ஷீலா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தில் சில சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாகவும் இந்த வசனங்கள் சாதி வெறியை தூண்டும் வகையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. இதற்கு பதிலடியாக நெட்டிசன்கள் சிலர் சில கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் ’திரௌபதி’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும் சென்னை காவல் ஆணையரிடம் பெரியார் திராவிட இயக்கம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த மனு மீது சென்னை காவல்துறை விரைவில் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் ஆண்ட சாதி, ஆதிக்க சாதி என்று ஒரு சில இயக்குனர்கள் படம் இயக்கிய போது புகார் கொடுக்காத பெரியார் திராவிட இயக்கம் தற்போது மட்டும் புகார் கொடுப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது