1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (08:01 IST)

மீராமிதுன் மீது புகார் அளித்தவரை அதிரடியாக கைது செய்த போலீஸ்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான மீராமிதுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த ஜோ மைக்கேல் என்பவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அவ்வப்போது யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவு செய்து அதில் பெண்கள் குறித்து இழிவாக பதிவு செய்ததாக ஜோ மைக்கேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமன்றி பெண்களுக்கு ஆதரவாக பேசும் அமைப்புகள் குறித்தும் அவர் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் காங்கிரஸ் தேசிய மகிலா காங்கிரஸ் பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி மற்றும் அழகு கலை நிபுணர் ஜெயந்தி ஆகியோர் புகார் ஒன்றை அளித்து இருந்தனர். 
 
இந்த புகார்களின் அடிப்படையில் மகளிர் காவல் துறையினர் விசாரித்து விசாரணைக்கு வருமாறு ஜோ மைக்கேலுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் இந்த சம்மனை மதிக்காமல் அவர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகாமல் இருந்ததாக தெரிகிறது
 
இதனை அடுத்து மகளிர் காவல் துறையினர் இருவர் ஜோ மைக்க்லே வீட்டிற்கு சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்களையும் தரக்குறைவாக பேசியது மட்டுமின்றி மிரட்டி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து பெண் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், குற்றம் கருதி கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்த அடையாறு மகளிர் காவல்துறையினர் ஜோ மைக்கல் பிரவீனை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது