பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது ‘சவரக்கத்தி’
மிஷ்கின் கதை எழுதி, தயாரித்துள்ள ‘சவரக்கத்தி’ படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சவரக்கத்தி’. இயக்குநர் ராம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பூர்ணா நடித்துள்ளார். பிரியாமணி உள்பட 6 ஹீரோயின்களுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பூர்ணா. காது கேட்காத மாற்றுத்திறனாளி கர்ப்பிணியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் பூர்ணா.
இந்தப் படத்துக்குக் கதை எழுதியிருப்பதோடு, முக்கியமான வேடத்தில் நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். மேலும், இந்தப் படத்தைத் தயாரித்திருப்பதும் மிஷ்கின் தான். இந்தப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
சாய் பல்லவியின் ‘கரு’, ஜோதிகாவின் ‘நாச்சியார்’, ஜீவாவின் ‘கீ’ ஆகிய படங்களும் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகின்றன.