Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு அடித்தது ஜாக்பாட்

CM| Last Modified வியாழன், 11 ஜனவரி 2018 (11:37 IST)
பொங்கலுக்கு ரிலீஸாகும் மூன்று படங்களுக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது என்கிறார்கள்.
பொதுவாக ஒரு தியேட்டரில் ஒரு நாளைக்கு 4 காட்சிகள் மட்டுமே படம் திரையிடப்படும். விடுமுறை நாட்களில்  எக்ஸ்ட்ராவாக  ஒரு காட்சி ஓட்டிக் கொள்ளலாம் என்பது அரசு விதி. அதன்படி பார்த்தால், பொங்கல் விடுமுறையில் 13, 14, 15  மற்றும் 16 ஆகிய 4 நாட்களுக்கு ஒரு காட்சி எக்ஸ்ட்ராவாக ஓட்டிக் கொள்ளலாம்.
 
இந்நிலையில், 12, 17 மற்றும் ஆகிய நாட்களிலும் எக்ஸ்ட்ராவாக ஒரு காட்சி ஓட்டிக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தமாக ஒரு வாரத்துக்கு தினமும் ஒரு காட்சி எக்ஸ்ட்ராவாக ஓட்டிக் கொள்ளலாம். எனவே, பொங்கலுக்கு  ரிலீஸாக இருக்கிற ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’, ‘குலேபகாவலி’ படங்களின் தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தில்  இருக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :