திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:57 IST)

சொந்த காரணங்களுக்காகத்தான் விலகினாராம் நம்பர் நடிகை

சொந்த காரணங்களுக்காகத்தான் படத்தில் இருந்து விலகியதாக நம்பர் நடிகை தெரிவித்துள்ளார்.


 
இரண்டெழுத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து சின்ன நம்பர் நடிகை சில நாட்களுக்கு முன்பு விலகினார். இரண்டு ஹீரோயின்கள் கொண்ட இந்தப் படத்தில், நம்பர் நடிகைக்கு குறைவான காட்சிகளே இருப்பதால் நடிகை விலகியதாக கூறப்பட்டது.
 
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாருக்கு பதிலளித்து நடிகை, ‘என்னுடைய சொந்தக் காரணங்களுக்காகப் படத்தில் இருந்து விலகியுள்ளேன். இன்னும் ஒருநாள் கூட ஷூட் எடுக்கவில்லை. வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.