வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (13:48 IST)

பரீட்சைக்காக நடிப்புக்கு பிரேக் விட்ட நிவேதா தாமஸ்

பரீட்சை எழுதுவதற்காக நடிப்பு சில மாதங்கள் பிரேக் விட்டுள்ளார் நிவேதா தாமஸ்.



கேரளாவைச் சேர்ந்த நிவேதா தாமஸ், குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் நடித்து, பின்னர் ஹீரோயினாக அறிமுகமானவர். சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘போராளி’ படம்தான் தமிழில் அவருக்கு முதல் படம். தற்போது தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திவரும் நிவேதா தாமஸுக்கு, ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்த ‘ஜெய் லவகுசா’தான் கடைசியாக நடித்த தெலுங்குப் படம். அதன்பின் பரீட்சை எழுதுவதற்காக சில மாதங்கள் நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளார்.

இந்நிலையில், “என்னுடைய அடுத்த பட அறிவிப்பு குறித்து எல்லா ரசிகர்களும் கேட்கின்றனர். ‘ஜெய் லவகுசா’வுக்குப் பிறகு என்னுடைய கடைசி செமஸ்டரை எழுதுவதற்காக பிரேக் விட்டுள்ளேன். அதேசமயம், ஒன்லைன் கேட்டும், கதைகளைப் படித்தும் வருகிறேன். விரைவில் அடுத்த பட அறிவிப்பு வரும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நிவேதா தாமஸ்.