வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (11:50 IST)

மகேஷ் பாபுவுக்காக ஓகே சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்.

மகேஷ் பாபுவுக்காக இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சம்மதித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.



கொரட்டலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘பரத் அனே நேனு’. கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ராம பிரபா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள ஜூனியர் என்.டி.ஆரிடம் கேட்டிருக்கிறார்கள். மகேஷ் பாபுவுக்காக இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்திருக்கிறாராம் ஜூனியர் என்.டி.ஆர்.