திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:59 IST)

என்னிடம் போலீஸார் எந்த விசாரணையும் நடத்தவில்லை… இயக்குனர் நெல்சன் தரப்பு விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி பரவி வந்த நிலையில் அதை நெல்சன் தரப்பு உறுதியாக மறுத்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 24 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக பிரபல ரவுடியான சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது சம்மந்தமான விசாரணை சங்கிலி தொடர் போல நீண்டுகொண்டே செல்கிறது. அதில் பிரபல திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா விசாரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள மொட்டை கிருஷ்ணன் என்பவருக்கு மோனிஷா பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிடப்பட்டதா என்றும் போலிஸார் விசாரித்து வருவதாக சொல்லப்பட்டது.