ஆர் ஜே பாலாஜி படத்தில் நயன்தாரா – பின்னணி என்ன ?

Last Modified வெள்ளி, 8 நவம்பர் 2019 (14:37 IST)
ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்த ஆர் ஜே பாலாஜி எல் கே ஜி படத்தின் மூலம் நாயகனாக ப்ரமோஷன் ஆனார். அரசியல் பகடி பேசிய அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகவே அந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  நிறுவனத்தின் தயாரிப்பிலேயே அடுத்த படமும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தப்படத்துக்கு மூக்குத்தி அம்மன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளையும் அவரே ஏற்கிறார். இந்நிலையில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்காக அவர் நயன்தாராவை அனுகியுள்ளார். ரானும் ரௌடிதான் படத்தின் போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பின் அடையாளமாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :