திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (19:56 IST)

நயன்தாரா பிறந்த நாள் காமன் டிபி போஸ்டரை வெளியிட்ட பிரபல இயக்குனர்!

பிரபல நடிகர் நடிகைகளின் பிறந்த நாளின்போது காமன் டிபி போஸ்டர் வெளியிடுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது 
 
முன்பெல்லாம் அஜித் விஜய் போன்ற மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே பிறந்தநாள் காமன் டிபி போஸ்டர்கள் வெளியிட்ட நிலையில் தற்போது பல நடிகர்களுக்கும் காமன் டிபி போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன 
 
இந்த நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் வருவதை அடுத்து நயன்தாராவுக்கும் காமன் டிபி போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த காமன் டிபி போஸ்டரை பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நயன்தாராவின் காமன் டிபி போஸ்டரை வெங்கட் பிரபு மட்டுமின்றி மேலும் சில திரையுலக பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.