வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (10:31 IST)

ஓடிடியில் வெளியாகிறது மோகன்லாலின் ப்ரோ டாடி!

பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள ப்ரோ டாடி படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று  ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட  பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். குறுகிய கால படமாக உருவான இந்த படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.

நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.