செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (16:05 IST)

புத்தாண்டு தினத்தில் மகான் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி!

மகான் படத்தின் வெளியீட்டு தேதியை புத்தாண்டு அன்று படக்குழு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று படத்தின் டீசரை வெளியிட்டு அதோடு ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.