செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:27 IST)

மம்முட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல்- தி கோர்' பட டிரைலர் ரிலீஸ்

kadhal
சூப்பர் ஸ்டார் மமுட்டி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காதல் பட டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமலை, காக்க காக்க, பிரியமான தோழி, சந்திரமுகி  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  சூர்யாவை திருமணம்
செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இநிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும்  இப்படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லியோ பேபி இயக்கும்  இப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். ஆதர்ஷ் சுகுமாரன், சகாரியா  எழுதியுள்ளார். மேத்யூ புலிக்கன் இசையமைத்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள  இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. யூடியூப் பக்கத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

இப்படம் வரும் நவம்பர் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.