வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (21:04 IST)

கமல்ஹாசனுக்கு அளித்த பரிசு பொருள் என்ன? பார்த்திபன் தகவல்

parthiban , surya
கமலின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், கமலுக்கு அளித்த பரிசுப் பொருள் பற்றி கூறியுள்ளார்.
.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.  இவர் நேற்று தன் 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நேற்று முன்தினம் சென்னை லீலா பேலஸில்  அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில், சூர்யா, அமீர்கான்,  உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும்  நன்றி கூறியிருந்தார்.

கமலில் பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள லீலா பேலஸஸில்  நடைபெற்ற  நிலையில்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், கமலுக்கு அளித்த பரிசுப் பொருள் பற்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில்,

‘’இரவில்  வந்த  சூரியன்! கமல் சார் பார்ட்டியில்  நீண்ட இடைவெளிக்குப் பின்  நேற்றைய ‘முன் தினம் பார்த்தேனே’. வயதாக ஆக சிலருக்கு மட்டுமே புது வித அழகும்,பொலிவும் கூடும்.கூடியமட்டும் நேரத்தை சினிமாவின் உச்சம் தொடவும்,மிச்சத்தை தன் உடல்நலம்+ குடும்ப மகிழ்ச்சிக்காக செலவிடும் நாயகன்.’கங்குவா’ காண காத்திருக்கிறேன்…

பி. கு.
கமல் சாருக்கு என்ன பரிசளித்தேன் என்று பலரும் கேட்டதற்கு என் பதில்…
 நூலகத்தில் வைக்க சில புத்தகங்கள்'' (Few books to the library )என்று தெரிவித்துள்ளார்.