செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (10:39 IST)

கூலி ஷூட்டிங்கில்தான் ரஜினிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதா?... இயக்குனர் லோகேஷ் கோபம்!

கடந்த 30 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் இருந்து செல்லு தமனியில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கத்தீட்டர் சிகிச்சை மூலமாக ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவனையில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அந்த சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஐசியுவில் சிகிச்சை அறைக்கு அவர் மாற்றப்பட்டு விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இதுபற்றி சில ஊடகங்களில் கூலி படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் ரஜினிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இதுபற்றி பேசியுள்ள லோகேஷ் ‘மருத்துவமனையில் ஒரு சிறிய சிகிச்சை செய்ய வேண்டியிருக்கு என ரஜினி சார் 40 நாட்களுக்கு முன்னெ என்னிடம் சொன்னார்.  ஆனால் அதற்குள் சில ஊடகங்களில் எங்கள் ஷூட்டிங்கில்தான் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது என சொல்லிவிட்டார்கள். அவர் முன்பே சொன்னதால்தான் நாங்கள் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை முன்பே படமாக்கி அவரை அனுப்பினோம். இங்கு வரும் செய்திகளை எலலாம் பார்த்தால் எங்களுக்கே பயமாக இருக்கிறது. அப்படி நடந்திருந்தால் நாங்கள் எல்லாம் மருத்துவமனை வாசலில் இருந்திருப்போம். கடவுள் அருளால் அவருக்கு ஒன்றும் ஆகாது.” எனப் பேசியுள்ளார்.