ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (07:27 IST)

ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி -ஜி கே வாசன்!

திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை குறித்து திருச்சி பெரம்பலூர் அரியலூர் மாவட்டம் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சியில் அதன் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் நடைபெற்றது 
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி கே வாசன் எம்பி கூறியதாவது.....
 
மதுவிலக்கு கொள்கையில் மத்திய மாநில அரசுகள் ஆக்கபூர்வமான கொள்கையை கடைபிடிக்க வேண்டும், மதுவிலக்கு என்ற கொள்கை குறித்து இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரே மேடையில் பேசுகின்றன, 
 
இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளின் மது கொள்கை என்ன? மதுவிலக்கு கொள்கையில் தமிழக மக்களை அவர்கள் ஏமாற்றக்கூடாது. ஆலையை நடத்துபவர்களை கூட்டத்தில் வைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று வலியுறுத்துவது என்பது மக்களை வாக்காளர்களை அலட்சியப்படுத்துவதாக அர்த்தம்.
 
அகில இந்திய கட்சித் தலைவர்கள் அனைத்தும் மதுவிலக்கு தொடர்பாக டெல்லியில் கூட்டம் போட்டு விவாதிக்கட்டும் முடிவு எடுக்கட்டுமே அதைத் தவிர்த்து ஏன் தமிழக மக்களை ஏமாற்ற வேண்டும்
 
மதுவினால் தமிழகத்தில் நேரிடும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசாமல் மறைத்துவிட்டனர், மக்களை ஏமாற்றும் கட்சிகளை, வாக்குசீட்டு மூலம் மக்கள் ஏமாற்ற தயாராகிவிட்டனர். 
 
மது கடைகளை  மூட தமிழக அரசின் கையில் அதிகாரம் இருக்கிறது, தமிழக மக்கள்நலன்மீது அக்கறையிருந்தால் மதுபான கடைகளை மூடவேண்டும் என தமாகா வலியுறுத்துகிறது என்றார்.
 
இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியில் அமரும் நாள் அன்று  பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்  என திமுகவினர் கூறுகின்றனரே என்ற கேள்விக்கு:
 
அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம் என்றார்
 
மீனவர்கள் பிரச்சனை வேதனையளிப்பதாக உள்ளது, இலங்கை சிறையில் உள்ள 163 மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
 
தமிழக அரசு முப்பதாயிரம் ஆசிரியர்களுக்கு மேல் ஊதியம் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது.
 
அதற்கு தமிழக அரசின் தவறான கல்விக் கொள்கையே காரணம், பள்ளி குழந்தைகள் படிப்பு பாழாககூடாது என்பதற்காக ஆசிரியர்களுக்கான ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும், பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர், இதற்கு முற்றுப்புள்ளி வைத்து இவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.
 
கல்விக் கொள்கை, நீட், மற்றும் மதுக்கொள்கை நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணியை குற்றம் சாட்டுகின்றேன்.
 
ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்ற செய்தி மகிழ்ச்சியான செய்தி அவர் வீடு திரும்பிய பிறகு அவர் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும்.
 
15 நாட்களுக்கு பின்னர் தொலைபேசியில் பேசி விசாரிப்பேன்
 
திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்படுத்தும் அரசாக உள்ளது,6 சதவீதம் வரிஉயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது
 
தமிழக அரசுக்கு பேச்சு மட்டும் தான் அதிகமாக உள்ளது செயல்பாடு குறைவாக உள்ளது, விவசாய மின் இணைப்பு கேட்டு 30 ஆயிரம் மேற்பட்டோர் காத்துக் கொண்டுள்ளனர், இனிய அரசியல் விவசாயிகளை ஏமாற்றாமல் காலம் தாழ்த்தாமல் மின்இணைப்பு வழங்கவேண்டும் என தமாகா வலியுறுத்துகிறது.
 
விளம்பரத்தில் தான் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது, அமைச்சரவை மாறலாம் ஆனால் ஆட்சியாளர்களின் செயல்பாட்டில் மாற்றம் இருக்காது.
 
விஜய் கட்சி தொடக்கம் என்பது ஆரவாரமாக இருக்கும் அதுதான் வழக்கம், பழக்கம். இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை விஜய் கட்சி மாநாட்டில் லீவு எடுத்துக்கொண்டு வாருங்கள் என புஸ்லி ஆனந்த் கூறியது என்பது, லீவு கொடுத்தபோது கூட ஓட்டுபோட வராதவர்கள் இதற்கா வரபோகிறார்கள்.
 
2026 தேர்தல் என்பது தமாகா இருக்கும் அணிதான் வெற்றிபெறும் அணி
 
விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்து, உலகதரத்தில் இருக்கும் என்ற மாற்று கருத்துக்கு இடமில்லை என தெரிவித்தார்.