திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 11 மார்ச் 2023 (08:09 IST)

த்ரி மஸ்கிட்டீயர்ஸ்… இதுவரை வெளிவராத கவுண்டமணியின் புகைப்படத்தைப் பகிர்ந்த குஷ்பு!

தமிழ் சினிமாவில் 16 வயதினேலே படம் ரஜினி, கமல் மற்றும் பாரதிராஜா பல ஜாம்பவான்களை உருவாக்கியது போலவே கவுண்டமணி என்னும் நகைச்சுவை ஜாம்பவானையும் உருவாக்கியது. அதன் பின்னர் தனது உடல் மொழியாலும், கவுண்ட்டர் வசனங்களாலும் தமிழ் திரையுலகை ஆளுகை செய்ய ஆரம்பித்தார் கவுண்டமணி. 40 வயதுக்கு பின்னரே வாய்ப்புக் கிடைத்து அதன் பின்னர் அதன் மூலம் உச்சாணிக் கொம்புக்கு சென்றதில் எம் ஜி ஆருக்கும் கவுண்டமணிக்கும் மிகப்பெரிய ஒற்றுமை உண்டு.

6 ஆண்டுகளுக்கு முன்னர் கவுண்டமணி எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் கதாநயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடுக்கிறார். பழனிச்சாமி வாத்தியார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி, நடிகர்கள் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது கணவருக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று கூறியுள்ளார்.