புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:09 IST)

1000 கோடி வசூலை நெருங்கிய கேஜிஎஃப் 2 … வெற்றிகரமான மூன்றாவது வாரம்!

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் வெளியான நான்கு நாட்களில் 540 கோடி ரூபாய் வரை உலகளவில் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது வாரம் தொடங்கியுள்ள நிலையில் தற்போதும் கூட்டம் குறையாமல் வசூலில் வெற்றி நடைப் போட்டு வருகிறது.

வெளியாகி மூன்றாவது வாரத்தில் இப்போது வரை ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்நிலையில் இதுவரை சுமார் 900 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு நாட்கள் வரை 540 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இரண்டாம் வார அதிகாரப்பூர்வ வசூல் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.