செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (16:11 IST)

தமிழகத்தில் 4ஆம் அலை இன்னும் தொடங்கவிட்டதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

subramanian
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக படிப்படியாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து நான்காவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் ஒரு கொரோனா உயிருப்பு  கூட இல்லை என்றும் தினசரி 100 க்கும் குறைவாகவே பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்தார் 
 
எனவே தமிழகத்தில் 4வது அலை தொடங்கவில்லை என்றும் அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்