திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (10:24 IST)

‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பியதுபோது பலியான விஜய் ரசிகர்

‘மெர்சல்’ கட்அவுட் வைத்துவிட்டுத் திரும்பியபோது, விஜய் ரசிகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். ‘லவ் டுடே’ ஸ்ரீநாத் என்றால் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். விஜய்யின் தீவிர ரசிகரான இவர், திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கிறார். விஜய்யின் உருவத்தை முதன்முதலில் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட ரசிகர் இவர்.
 
‘மெர்சல்’ முதல் வாரம் வெற்றிகரமாக ஓடி, நேற்று முதல் இரண்டாவது வாரத்தைத் தொடங்கி இருக்கிறது. இதற்காக  கட்அவுட் வைத்துவிட்டு நேற்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது பஸ் மோதி பலியானார். இந்த சம்பவம்  விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.