திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2017 (12:50 IST)

மீசை இருந்ததால் முத்தம் கொடுக்க சிரமப்பட்டேன் - நடிகை பேட்டி

தன்னுடன் நடித்த இரண்டு ஹீரோக்களும் மீசை வைத்திருந்ததால் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பது சிரமமாக இருந்தது என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.


 

 
நடிகை கங்கனா ரனாவத் , ஷாகித் கபூர் மற்றும் சயீப் அலி ஆகியோர் நடித்து விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்  ‘ரங்கூன்’. இரண்டாம் உலகப்போரின் போது நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 


 

 
இதில் ஒரு நடிகையின் மீது, இயக்குனர் ஒருவரும், ராணுவ வீரர் ஒருவரும் காதல் கொள்ளும்படியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூடவே, நிறைய லிப் டு லிப் முத்தக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ஹீரோக்கள் இரண்டு பேரும் மீசை வைத்திருந்ததால், முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பது சிரமாக இருந்ததாக ரங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.