செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (10:33 IST)

சர்ச்சைகளைக் கடந்து 1.5 கோடி பார்வையாளர்கள் பார்த்த ‘தக் லைஃப்’ கிளிம்ப்ஸ் வீடியோ!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல்234 பட டைட்டில் 'தக் லைஃப்'  என்று சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்போடு படத்தின் ப்ரமோஷன் வீடியோவை கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ப்ரமோ வீடியொவில் கமல் பேசும் வசனத்தில் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்” என சொல்ல, ஏன் ஜாதிப் பெயரை வைத்து தொடர்ந்து கமல் படங்கள் எடுக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் எதிர் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சர்ச்சைகளைக் கடந்தும் அந்த ப்ரமோஷன் வீடியோ இப்போது சமூகவலைதளத்தில் 1.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மமான் இசையமைக்க, அன்பறிவ் சண்டை காட்சிகளை இயக்க உள்ளனர். ரவி சே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது.