செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (13:00 IST)

கமல்- மணிரத்னம் இணையும் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்

KAMAL -MANIRATHNAM
மணிரத்னம் நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து  கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றும் படம் கமல் 234. இந்த படத்தின்  ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கமல்- மணிரத்னம் இணையும் இப்படத்தின் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில்  நடிக்கும் நடிகர்கள் பற்றி அறிவிக்கவில்லை. ஆனால் ஹீரோயினாக  நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வரும் நவம்பர் 7 ஆம் இப்பட முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்து,  கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் இணையும் கமல் 234 பட பூஜை தொடங்க விழாவில் எடுக்கப்பட்ட  புகைப்படத்தை  நேற்று பகிர்ந்தது.

இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தன் யூடியூப் பக்கத்தில், இப்பட பூஜை வீடியோ வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.அன்பறிவ் ஸ்டண்ட் அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.