1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜூலை 2018 (09:39 IST)

பிக்பாஸ் வீட்டில் 'கடைக்குட்டி சிங்கம்' படக்குழு

கார்த்தி, சாயிஷா, சூரி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் குழுவினர் இன்று பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கார்த்தி, சூரி, பாண்டிராஜ் பேசும் கலகலப்பான காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. குறிப்பாக மகத், சூரியை பார்த்து எப்படி இருக்கின்றாய்? என்று கேட்க அதற்கு சூரி, 'நீ உள்ள இருக்கறதனால நான் நல்லா இருக்கேன்' என்று கூறினார். அதேபோல் 'உன் பெட்ரூம் இங்கே இருக்கும்போது நீ ஏண்டா ஆட்டோ பிடித்து அங்க போற' என்று மகத்தை நோக்கி இயக்குனர் பாண்டிராஜ் கேட்கும் கேள்வியால் பிக்பாஸ் வீடே கலகலப்பாகியுள்ளது.
 
பிக்பாஸ் முதல் பாகத்தின்போலும் தமிழக கபடி அணியினர் மற்றும் 'பலூன்' படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வீட்டை கலகலப்பாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.