1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 மே 2018 (21:01 IST)

'மெர்சல்' பாணியில் டுவிட்டர் எமோஜியை பெற்ற 'காலா'

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' என்ற வெற்றி திரைப்படம் பாஜக தலைவர்கள் புண்ணியத்தில் சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்திற்கு ஒரு பெருமை உண்டு. அதாவது தென்னிந்திய மொழி படங்களில் முதன்முதலில் டுவிட்டர் எமோஜியை பெற்ற திரைபப்டம் இதுதான். இந்த படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்டர் எமோஜியை பெற்றது.
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தை அடுத்து தற்போது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், தான் தயாரித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' படத்திற்காக டுவிட்டர் எமோஜியை பெற்றுள்ளது. மெர்சல் திரைப்படம் ஒரே ஒரு எமோஜியை மட்டுமே பெற்ற நிலையில் 'காலா'  திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் எமோஜிக்களை பெற்று அசத்தியுள்ளது.
 
வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள 'காலா' படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ளனர். முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.