21 ஆண்டுகளாக செய்யாததை இப்போது செய்யும் கே எஸ் ரவிக்குமார்!
இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்ட கே எஸ் ரவிக்குமார் தெனாலி படத்துக்கு பிறகு இப்போது கூகுள் குட்டப்பன் எனும் படத்தை தயாரித்து வருகிறார்.
மலையாள சினிமாவில் கதையம்சம் உள்ள பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாத படங்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அந்த படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்த வகையில் சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடி பிளாட்பார்ம்களின் மூலம் மற்ற மொழி ரசிகர்களையும் சென்றடைந்தன.
இப்போது தமிழில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கே எஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார். இந்த படத்தில் அவர் குட்டப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில் அவரது உதவியாளர் இயக்க ஒருவரே இயக்க உள்ளார். இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் அறிமுகமாகவுள்ளனர்.
2000 ஆம் ஆண்டு தெனாலி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே எஸ் ரவிக்குமார் அதன் பின்னான 21 ஆண்டுகளில் ஒரு படம் கூட தயாரிக்கவில்லை. ஆனால் இப்போது ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் கதை பிடித்துப் போனதால் அதை தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளாராம்.