புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (23:51 IST)

தனுஷ் பட தயாரிப்பாளர் முக்கிய அப்டேட்...ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் காட்சிகள் லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் தளர்வுகளுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சமீபத்தில் முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டிற்கான ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எனவே கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இதையே தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் அதுபற்றி டிவீட் செய்திருந்தார்.

அதில் ‘கர்ணன் படத்தை பார்த்து மிரண்டு போனேன். தனுஷ், மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு மற்றும் படக்குழுவினரைப் பார்த்து பெருமைப் படுகிறேன். கர்ணன் – அனைத்தும் கொடுப்பான்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.