செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (16:12 IST)

விஷ்ணு விஷாலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காதலி...!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துகொண்டனர்.

பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி வருவதுடன் அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு கிசு கிசுக்கப்படுவார். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் ஜுவாலா கட்டா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஷ்ணு விஷாலுக்கு அவரது காதலி ஜுவாலா கட்டா சர்ப்ரைஸ் விசிட் அடித்து கேக் வெட்டி வாழ்த்து கூறிய அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு " என்னுடைய பிறந்தநாள் சர்ப்ரைஸ்" என கூறி பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்ந்து கூறி கியூட் ஜோடி என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My bday suprise...