செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 மே 2020 (10:05 IST)

தயாரிப்பாளர் தரவேண்டிய சம்பளத்தை தனது கையில் இருந்து கொடுத்த பிரபல நடிகர்

தயாரிப்பாளர்கள் தரவேண்டிய தயாரிப்பு நிர்வாக அலுவலக ஊழியர்களின் சம்பளத்தை தனது கையில் இருந்து கொடுத்த பிரபல நடிகர் ஒருவரால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கோலிவுட்டின் இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த மூன்று திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தகவல் அவருக்குக் கிடைத்து உள்ளது
 
இதனை அடுத்து தான் நடித்து வரும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது கையில் இருந்து முழு சம்பளத்தையும் ஊழியர்களுக்கு விஷ்ணு விஷால் அளித்துள்ளார். இதனால் தயாரிப்பு நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் 
 
ஏற்கனவே நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்து வந்த மூன்று திரைப்படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்துள்ள நிலையில் தற்போது தயாரிப்பு நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விஷ்ணுவிஷால் சம்பளம் கொடுத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது 
 
இதேபோல் மற்ற பெரிய நடிகர்களும் தங்களது தயாரிப்பு நிர்வாக அலுவலக ஊழியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது