வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (15:32 IST)

பூஜையுடன் தொடங்கியது ஜூனியர் NTR- பிரசாந்த் நீல் படம்!

கே ஜி எஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 மூலமாக இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக உருவாகியுள்ளார் பிரசாந்த் நீல்.  இதையடுத்து அவர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்துக்கு தற்போது NTR 31 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.  ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த படம் ஜனவரி 9 ஆம் தேதி 2026 ஆம் ஆண்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.