வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (14:15 IST)

3 கொடிகள் வடிவமைப்பு.. விஜய் தான் முடிவெடுப்பார்.. த.வெ.க. தலைமை தகவல்

Vijay Speech
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்றில் எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய் தான் முடிவெடுப்பார் என த.வெ.க. தலைமை தகவல் தெரிவித்துள்ளது.

விஜய்யின் த.வெ.க.வின் முதல் மாநாட்டிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் வெளியாகும் வரை, த.வெ.க. தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 5ல் விஜய் நடித்த ‘கோட்’ படம் வெளியான பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் மாநாட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்த உள்ளதாகவும் லட்சக்கணக்கான கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva