ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஜூலை 2023 (09:28 IST)

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா… சன் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோ!

அண்ணாத்த திரைப்படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்பட, ஜெயிலர். வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. அதற்குக் காரணம் ரஜினிகாந்தின் வரிசையான முந்தைய தோல்வி படங்கள்தான். அதே போல படத்தை இயக்கும் நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் திரைப்படமும் தோல்வி படமாக அமைந்தது.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியோடு மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பலமொழி கலைஞர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படம் சுதந்திர தின விடுமுறையை ஒட்டி ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதுவரை படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது இது சம்மந்தமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை ரஜினி, தன்னுடைய படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாக்களில் பேசியவற்றை இணைத்து உருவாக்கியுள்ளது. இதனால் விரைவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.