புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (13:44 IST)

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தீபாவளிக்கு ரிலீஸான திரைப்படம் ‘பிரதர்’படுதோல்வி படமாக அமைந்தது. ஜெயம் ரவியின் திரைவாழ்க்கையில் எந்த படமும் அடையாத படுதோல்வியாக பிரதர் படம் அமைந்துள்ளது. இந்த படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் லண்டன் கருணாவுக்கு 7 கோடி ரூபாய் வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜெயம் ரவியின் திரைவாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாக நேர்மறையாக செல்லவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தவிர வேறு எந்த படமும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் பிரதர் படத்துக்கு ரிலீஸுக்கு முன்பு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை. படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி என்ற பாடல் சென்சேஷன் ஹிட்டானது மட்டுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் ஒரு பாடல் மட்டும் படத்தின் வெற்றிக்குப் போதாது அல்லவா? 

இந்நிலையில் ஜெயம் ரவி எப்படியாவது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாகி, இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட கதைகளைக் கேட்டு சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதை இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரின் கதை என்று சொல்லப்படுகிறது. அந்த கதையில் என்ன சிறப்பு என்றால் அது கணவன் மனைவி விவாகரத்து சம்மந்தப்பட்ட ஒரு கதை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்துக் கோரியுள்ள நிலையில் இப்படி ஒரு கதையில் நடிப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அந்த கதையை ஜெயம் ரவி தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.