புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (17:09 IST)

இதுதானா அஜித் படத்தின் கதை?

அஜித் நடிப்பில் வருகிற வியாழக்கிழமை ரிலீஸாக உள்ள ‘விவேகம்’ படத்தின் கதை இதுதான் என்று இணையதளங்களில் ஒரு கதை உலா வருகிறது.



 
அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளார். வருகிற வியாழக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் கதை இதுதான் என ஒரு கதை இணையதளத்தைச் சுற்றி வருகிறது.

தீவிரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப் போகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்போது சின்னச் சின்ன தாக்குதல்களும் அரங்கேறுகின்றன. எனவே, இந்தியாவின் உளவுப்பிரிவான ரா தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் ஒரு ரகசிய குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவர் தான் அஜித். தீவிரவாதிகளின் தாக்குதல்களை அஜித் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.