என் பெயரை பயன்படுத்த வேண்டாம்; அஜித் எச்சரிக்கை
தனிப்பட்ட கருத்தை வெளியிட அஜித் பெயரை பயன்படுத்தக்கூடாது என அஜித் சட்ட ஆலோசகர் பரத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஜித் சட்ட ஆலோசகர் பரத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
எனது கட்சிக்காரர் அஜித்துக்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எந்த கணக்கு இல்லை. அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் அவர்களது தனிப்பட்ட கருத்தை பரப்பி வருகின்றனர்.
எனது கட்சிக்காரர் எந்த ஒரு வணிக சின்னம், பொருள், அமைப்புக்கு விளம்பர தூதர் இல்லை. அவர் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ ஆதரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தை வெளியிட யாரையும் அனுமதிக்கவில்லை.
அஜித் எந்த ஒரு கருத்தையும் தெரிவிப்பது இல்லை. சமூக வலைதளங்களில் அஜித் பெயர் மற்றும் புகைப்படத்துடன் பரவும் கருத்துகள் அனைத்து பொய்யானவை என்பதை இந்த அறிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.