1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 19 டிசம்பர் 2019 (12:33 IST)

என்ன பேய் இது...? பயமே வரல... "இருட்டு" படத்தின் புதிய ஸ்னீக் பீக்!

துரை இயக்கத்தில் சுந்தர் சி. ஹீரோவாக நடித்துள்ள திகில் திரைப்படம் "இருட்டு". இந்த படம் டிசம்பர் 6ம் தேதி நாளை ரிலீஸாக உள்ளது. இப்படத்தில்  சுந்தர் சிக்கு ஜோடியாக புதுமுக நடிகை சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. 
 
இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து படத்தின் மீதான கவனத்தை மக்கள் மத்தியில் அதிகரித்தது. காரணம் இதில் சுந்த சி. போலீஸ் அதிகாரியாக லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தது தான். அவருடன் தன்ஷிகா, சாக்சி , வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சாய் தன்ஷிகா கவர்ச்சி பேயாக வந்து பயமுறுவதாக கூறி இதையே செய்கிறார். ஆனால், அது கொஞ்சம் கூட திகில் கொடுக்கவே இல்லை.