புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2019 (16:38 IST)

இவன் வாழ்க்கையில விதி பயங்கரமா விளையாடுது ட்ரெண்டிங்கில் "தனுசு ராசி நேயர்களே" ட்ரைலர்!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் ட்ரைலர் யூடியூபில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, மற்றும் சில நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 
 
சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 
 
ட்ரைலரில் "கெட்டவனா இருந்தா திட்டறீங்க...நல்லவனா இருந்தா சிரிக்கறீங்க" போன்ற வசனங்கள்  சிங்கிள் பசங்களின் நிலைமையை எடுத்துரைக்கிறது.